/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கட்டட பொறியாளர் சங்கம் நிர்வாகிகள் பொறுப்பேற்பு கட்டட பொறியாளர் சங்கம் நிர்வாகிகள் பொறுப்பேற்பு
கட்டட பொறியாளர் சங்கம் நிர்வாகிகள் பொறுப்பேற்பு
கட்டட பொறியாளர் சங்கம் நிர்வாகிகள் பொறுப்பேற்பு
கட்டட பொறியாளர் சங்கம் நிர்வாகிகள் பொறுப்பேற்பு
ADDED : ஜூலை 26, 2024 10:59 PM

கோவை:கோவை மண்டல கட்டட பொறியாளர்கள் சங்க (கொஜினா) 2024-25ம் ஆண்டிற்கான புதிய நிர்வாக குழு பதவி ஏற்பு விழா, அவிநாசி சாலையில் உள்ள, தி கிராண்ட் ரீஜன்ட் ஓட்டலில் நடந்தது.
நடப்பாண்டுக்கான தலைவராக, பொறியாளர் ராஜதுரை, துறைத்தலைவராக பழனிச்சாமி, செயலாளராக நாகேந்திரகுமார், பொருளாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் செயற்குழு உறுப்பினர் அனைவரும் பதவியேற்றுக்கொண்டனர்.
நிகழ்வின் ஒரு பகுதியாக, கோவை மண்டல கட்டட பொறியாளர்கள் சங்கம் மற்றும் கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு இணைந்து நடத்தும், கட்டட கண்காட்சி திருவிழா குறித்த மலர் வெளியிடப்பட்டது. இக்கண்காட்சி, செப்., 28,29 ஆகிய தேதிகளில், கொடிசியா அரங்கில் நடக்கவுள்ளது.
இதில், சங்க நிர்வாகி பெருமாள், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன் குமார், லட்சுமி செராமிக்ஸ் நிறுவன தலைவர் முத்துராமன், காவேரி பைப் கம்பெனி நிறுவன தலைவர் வினோத் சிங் ரத்தோர், மகாவீர் மார்பிள் நிர்வாகி அமித்ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.