ADDED : ஜூலை 19, 2024 11:32 PM
கோவை;துடியலுார், தொப்பம்பட்டியை சேர்ந்தவர் நாகலிங்கம்,42. ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவருடைய 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கு,மே 2ம் தேதி வந்த குறுந்தகவலில், 'நிறுவனத்தின் பங்குகளை வாங்கியும், விற்பனை செய்தும் அதிக லாபம் ஈட்டலாம்' என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை நம்பி ஏழு தவணைகளில், குறிப்பிடப்பட்ட வங்கி கணக்குக்கு ரூ.10 லட்சம் அனுப்பியுள்ளார்.
எந்த லாப தொகையும் வரவில்லை. நாகலிங்கம், மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். விசாரணை நடக்கிறது.