/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வீட்டு வசதி வாரிய வணிக வளாக கட்டடத்துக்கு 'இ - டெண்டர்' வீட்டு வசதி வாரிய வணிக வளாக கட்டடத்துக்கு 'இ - டெண்டர்'
வீட்டு வசதி வாரிய வணிக வளாக கட்டடத்துக்கு 'இ - டெண்டர்'
வீட்டு வசதி வாரிய வணிக வளாக கட்டடத்துக்கு 'இ - டெண்டர்'
வீட்டு வசதி வாரிய வணிக வளாக கட்டடத்துக்கு 'இ - டெண்டர்'
ADDED : ஜூலை 19, 2024 11:33 PM

கோவை:கோவை சுந்தராபுரத்தில் கட்டப்பட்டுள்ள, வீட்டு வசதி வாரியத்தின் வணிக வளாக கட்டடம், மாதாந்திர வாடகை அடிப்படையில் ஒதுக்கீட்டுக்கு, இரண்டாவது முறையாக, விரைவில் 'இ - டெண்டர்' விடப்பட உள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கோவை வீட்டு வசதி பிரிவின் கீழ் உள்ள, குறிச்சி புறநகர் திட்டம் பகுதி - 1, வணிக வளாக மனையில் அமைந்துள்ள வணிக வளாக கட்டடத்தில், மாதாந்திர வாடகை அடிப்படையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.
ரூ. 13.34 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வணிக வளாகம், தரைதளத்தில், 242, 246, 267 சதுரடியில், 6 கடைகளுக்கு இடம் ஒதுக்கப்பட உள்ளன. முதல் தளத்தில், 2,570, 2867 சதுரடி, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது தளங்களில், 3026, 3076, 3370 சதுரடியில், அலுவலகம், வணிகத்துக்கு என, 14 எண்ணிக்கையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர வாடகை, சதுரடிக்கு ரூ.42 மற்றும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி., என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 13ம் தேதி, பொள்ளாச்சி வந்த முதல்வர் ஸ்டாலின், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில், ரூ.560 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட 273 திட்டங்களை துவக்கி வைத்தார்.
துவக்கி வைக்கப்பட்ட திட்டங்களில், குறிச்சி புறநகர் திட்டம் பகுதி - 1, வணிக வளாக மனையில் அமைந்துள்ள வணிக வளாக கட்டடமும் ஒன்று.
இதற்கு பின், கடைகளுக்கான 'இ-டெண்டர்' அறிவிக்கப்பட்டது. ஆனால், லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததால், இங்கு, ஏலம் எடுப்பதற்கான 'இ-டெண்டர்' ரத்து செய்யப்பட்டது.
தற்போது தேர்தல் முடிந்த நிலையில், இம்மாத இறுதியில், மீண்டும் 'இ-டெண்டர்' விடப்பட உள்ளது.