/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பாகுபலி யானை மீது பட்டாசு வீச்சு; வனத்துறை வழக்குப்பதிவு பாகுபலி யானை மீது பட்டாசு வீச்சு; வனத்துறை வழக்குப்பதிவு
பாகுபலி யானை மீது பட்டாசு வீச்சு; வனத்துறை வழக்குப்பதிவு
பாகுபலி யானை மீது பட்டாசு வீச்சு; வனத்துறை வழக்குப்பதிவு
பாகுபலி யானை மீது பட்டாசு வீச்சு; வனத்துறை வழக்குப்பதிவு
ADDED : மார் 11, 2025 11:36 PM
மேட்டுப்பாளையம்; பாகுபலி யானை மீது பட்டாசு வீசிய சம்பவம் தொடர்பாக, வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு, வனத்துறையால் பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று முன் தினம் அதிகாலை பாகுபலி யானை மேட்டுப்பாளையம் -- ஊட்டி சாலையில் உலா வந்தது. அப்போது, யானையை விரட்ட சிலர் அதன் மீது பட்டாசுகளை வீசினர். பாகுபலி யானை மீதும், அருகிலும் பட்டாசு வெடித்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், ''பாகுபலி யானை மீது பட்டாசு வீசிய சம்பவம் தொடர்பாக, வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணை முடிந்த பிறகே மீதி விவரங்கள் சொல்ல முடியும். மேலும், ஊட்டி சாலையில் ஓடந்துறை முதல் கல்லாறு வரை சாலையோரம் பழக்கடைகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறையினரிடம் கேட்டுக்கொண்டுள்ளோம்,'' என்றார்.---