/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அத்திக்கடவு அவிநாசி திட்டம் உரிமைக்குழு கூட்டம் அத்திக்கடவு அவிநாசி திட்டம் உரிமைக்குழு கூட்டம்
அத்திக்கடவு அவிநாசி திட்டம் உரிமைக்குழு கூட்டம்
அத்திக்கடவு அவிநாசி திட்டம் உரிமைக்குழு கூட்டம்
அத்திக்கடவு அவிநாசி திட்டம் உரிமைக்குழு கூட்டம்
ADDED : மார் 11, 2025 11:36 PM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம், பவானிசாகர் அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிலை 2, உரிமை குழு கூட்டம், மேட்டுப்பாளையத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு பவானி நதிநீர் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு குழு தலைவர் அரங்கசாமி தலைமை வகித்தார். பவானி ஆற்று நீர் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் துரைசாமி, முன்னாள் எம்.எல்.ஏ அருண்குமார், காங்., தலைவர் தங்கமணி, பா.ஜ., நிர்வாகி பாண்டுரங்கன் உள்பட, பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிலை 2, உடனடியாக அரசு அமல்படுத்த வேண்டும். வருகிற 17ம் தேதி காலை, 10 மணிக்கு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு, பவானி ஆற்று படித்துறையில் நின்று, பவானி நதியிடம் கோரிக்கை மனுவை கொடுப்பது, எனவே இந்த கோரிக்கை மனு அளிக்கும் போராட்டத்தில், அனைத்து அரசியல் கட்சியினர், விவசாய சங்கங்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.