/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விளைபொருளுக்கு விலையில்லை: சாகுபடியை தவிர்த்த விவசாயிகள் விளைபொருளுக்கு விலையில்லை: சாகுபடியை தவிர்த்த விவசாயிகள்
விளைபொருளுக்கு விலையில்லை: சாகுபடியை தவிர்த்த விவசாயிகள்
விளைபொருளுக்கு விலையில்லை: சாகுபடியை தவிர்த்த விவசாயிகள்
விளைபொருளுக்கு விலையில்லை: சாகுபடியை தவிர்த்த விவசாயிகள்
ADDED : ஜூன் 06, 2024 11:40 PM
பொள்ளாச்சி:விளைப் பொருட்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்காததால், விவசாயிகள் பயிர் சாகுபடியை தவிர்த்து வருகின்றனர்.
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, நெகமம் உள்ளிட்ட நீர்ப்பாசனம் அதிகம் உள்ள பகுதிகளில் சின்ன வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறி பயிர், நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட மானாவாரி பயிர்களும் விளைவிக்கப்படுகின்றன.
இவை, பொள்ளாச்சி, கோவை, கிணத்துக்கடவு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லப்படுகின்றன. சில நேரங்களில், விளைப் பொருட்களுக்கான விலை சரிவு, உர விலையேற்றம், பணியாட்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால், விவசாயிகள் வேதனையடைகின்றனர்.
இதனால், சிலர் சாகுபடியைத் தவிர்த்தும் வருவதால், சாகுபடி பரப்புகள் தரிசாக காணப்படுகிறது.
விவசாயிகள் கூறுகையில், 'நிலத்தை பராமரிப்பது முதல், சாகுபடி முடியும் வரை, விவசாயத்தில் பல்வேறு சிரமம் உள்ளது. பல்வேறு பிரச்னைக்கு இடையே விளைவித்த பொருட்களை மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றால், கட்டுபடியான விலை கிடைப்பதில்லை. இதனால், சாகுபடியை கைவிட்டுள்ளோம்,' என்றனர்.