/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கல்குவாரியில் வெடி வைப்பதால் அதிர்வு: ஜமாபந்தியில் விவசாயிகள் மனு கல்குவாரியில் வெடி வைப்பதால் அதிர்வு: ஜமாபந்தியில் விவசாயிகள் மனு
கல்குவாரியில் வெடி வைப்பதால் அதிர்வு: ஜமாபந்தியில் விவசாயிகள் மனு
கல்குவாரியில் வெடி வைப்பதால் அதிர்வு: ஜமாபந்தியில் விவசாயிகள் மனு
கல்குவாரியில் வெடி வைப்பதால் அதிர்வு: ஜமாபந்தியில் விவசாயிகள் மனு
ADDED : ஜூன் 25, 2024 11:32 PM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில், தாட்கோ மாவட்ட மேலாளர் மகேஸ்வரி, தலைமையில் ஜமாபந்தி நடந்தது. இதில், தமிழக விவசாய பாதுகாப்பு சங்கம் சார்பில், நெ.10.முத்தூர் பகுதியில் உள்ள கல்குவாரியில் விதிமீறல் நடப்பதாக மனு அளிக்கப்பட்டுள்ளது.
மனுவில் கூறியிருப்பதாவது:
நெ.10முத்தூர் பகுதியில் உள்ள கல்குவாரி, விவசாய நிலம் அருகே அமைந்துள்ளது. இந்த குவாரியில் அதிக வெடி மருந்துகள் பயன்படுத்தி வெடிப்பதன் வாயிலாக ஏற்படும் புகை மற்றும் தூசுகளால் வீடுகளில் வசிக்க சிரமம் ஏற்படுகிறது. மேலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுவாசக்கோளாறு ஏற்படுகிறது.
விளைநிலத்தில் பந்தல் வகை காய்கறிகள் அதிகம் பயிரிடுவதால், இந்த குவாரிகளில் இருந்து வரும் புகை பயிர்களை நாசம் செய்கிறது. இதனால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது.
அதிக வெடி வைத்து பாறைகள் உடைக்கப்படுவதால், அதிர்வில் வீட்டில் விரிசல்கள் ஏற்படுகிறது. மேலும், பகல் நேரத்தில் குழந்தைகள் வீட்டில் இருக்க அச்சப்படுகின்றனர். இதுகுறித்து, கனிம வளத்துறை முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை அனைத்து அதிகாரிகளுக்கும் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, விதிமீறி செய்யப்படும் குவாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜமாபந்தி அலுவலர் கூறுகையில், 'மனு மீது விசாரணை நடத்தி, கல்குவாரியால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.