/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ திடீர் சர்ச் உருவாவதை தடுக்க வலியுறுத்தல் திடீர் சர்ச் உருவாவதை தடுக்க வலியுறுத்தல்
திடீர் சர்ச் உருவாவதை தடுக்க வலியுறுத்தல்
திடீர் சர்ச் உருவாவதை தடுக்க வலியுறுத்தல்
திடீர் சர்ச் உருவாவதை தடுக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 20, 2024 04:58 AM
கோவை, : கோவை - திருச்சி சாலை சுங்கம் அருகே, உருவாகியுள்ள திடீர் சர்ச் நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்று, விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, கலெக்டரிடம் அளித்துள்ள மனு:
கோவை திருச்சி சாலை சுங்கம் சிந்தாமணிக்கு பின்பகுதியிலுள்ள, அகஸ்தியன் பேட்டை பகுதியில் சில நாட்களுக்கு முன், அகஸ்டியன் அன்னை வேளாங்கன்னி ஆரோக்கியமாதா கெபி என்ற ஒரு சர்ச் திடீரென்று நிறுவப் பட்டுள்ளது. அதற்கான சுற்றுச்சுவர், அவசர அவசரமாக கட்டப்பட்டு வருகிறது. இது பொது இடமாக இருந்தும், மாநகராட்சியும் மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை. அப்பகுதியில் திடீர் சர்ச் முளைப்பதை, தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோரிக்கையை முன்னிறுத்தி, விஷ்வ ஹிந்து பரிஷத் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் ரவீந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோகிலாவிடம், கோரிக்கை மனுவை நேற்று சமர்ப்பித்தார்.