Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாவட்ட கூடைப்பந்து போட்டி துவக்கம் 

மாவட்ட கூடைப்பந்து போட்டி துவக்கம் 

மாவட்ட கூடைப்பந்து போட்டி துவக்கம் 

மாவட்ட கூடைப்பந்து போட்டி துவக்கம் 

ADDED : ஜூன் 20, 2024 05:01 AM


Google News
Latest Tamil News
கோவை, : பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி, மாவட்ட கூடைப்பந்து கழக மைதானத்தில் நேற்று துவங்கியது.

ராஜலட்சுமி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், பள்ளி மாணவ - மாணவியருக்கு '3ம் ஆண்டு ஸ்ரீ நவக்கொடி நினைவு கோப்பைக்கான' மாவட்ட கூடைப்பந்து போட்டி, நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் நேற்று துவங்கியது; வரும் 23ம் தேதி வரை நடக்கிறது.

மாணவ - மாணவியருக்கு 13 மற்றும் 16 வயதுக்கு உட்பட்டோர் என, இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. நாக் அவுட் மற்றும் லீக் அடிப்படையில் நடக்கும் இப்போட்டியில் மொத்தம், 52 அணிகள் பங்கேற்றுள்ளன.

நேற்று நடந்த போட்டி முடிவுகள்:

13 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் ஒய்.எம்.சி.ஏ., அணி 71 - 38 என்ற புள்ளிக்கணக்கில் ராஜலட்சுமி மில்ஸ் 'பி' அணியையும், சுகுணா பிப்ஸ் அணி 50 - 20 என்ற புள்ளிக்கணக்கில் வித்யா நிகேதன் அணியையும் வீழ்த்தின.

13 வயது மாணவியர் பிரிவில், எஸ்.வி.ஜி.வி., அணி 52 - 39 என்ற புள்ளிக்கணக்கில் ராஜலட்சுமி மில்ஸ் அணியை வீழ்த்தியது.

16 வயது மாணவர்கள் பிரிவில், சுகுணா பிப்ஸ் அணி 65 - 39 என்ற புள்ளிக்கணக்கில் யெல்லோ டிரைன் பள்ளியையும், ஸ்டேன்ஸ் பள்ளி அணி 61 - 52 என்ற புள்ளிக்கணக்கில் ராஜலட்சுமி மில்ஸ் 'பி' அணியையும், ஆர்.கே.எஸ்., அணி 56 - 35 என்ற புள்ளிக்கணக்கில் ஜே.சி., பள்ளி அணியையும் வீழ்த்தியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us