/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தெற்கு தாலுகா அலுவலகம் வந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தெற்கு தாலுகா அலுவலகம் வந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
தெற்கு தாலுகா அலுவலகம் வந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
தெற்கு தாலுகா அலுவலகம் வந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
தெற்கு தாலுகா அலுவலகம் வந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
ADDED : ஜூன் 06, 2024 06:47 AM

கோவை : ஓட்டு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட சூழலில், நேற்று கோவை அரசு பொறியியற் கல்லுாரியிலிருந்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கோவை தெற்கு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு, சீலிடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
கோவை லோக்சபா தொகுதிக்குட்பட்ட, கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லுார், கவுண்டம்பாளையம், பல்லடம், சூலுார் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளுக் குட்பட்ட 2,059 ஓட்டுச் சாவடிகளில், 3096 பூத்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஓட்டுப்பதிவிற்காக 8061, பேலட் யூனிட்களும், 3,751 கன்ட்ரோல் யூனிட்களும், 4,026 வீவிபேட் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.
ஓட்டு எண்ணிக்கை, கோவை அரசு பொறியியல் கல்லுாரியில் நேற்று முன் தினம் முடிந்த நிலையில், கோவை தெற்கு தாலுகா அலுவலகத்திலுள்ள இயந்திரங்களை, இருப்பு வைக்கும் ஸ்ட்ராங் ரூமில் பாதுகாப்பாக நேற்று வைக்கப்பட்டன.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் அறைக்கு சீல் வைக்கப்பட்டன. அப்போது மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை பணியாளர்கள் இருந்தனர்.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட்,வீவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டவை தனியாகவும், 'ரிசர்வ்' வைக்கப்பட்டிருந்த 10 சதவீத மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பயிற்சி, விழிப்புணர்வு பணிக்கு வைக்கப்பட்ட 700 இயந்திரங்கள் தனியாகவும் வைக்கப்பட்டுள்ளது' என்றனர்.