/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளி துாய்மை கண்காணிக்க கல்வித்துறை அறிவுறுத்தல் பள்ளி துாய்மை கண்காணிக்க கல்வித்துறை அறிவுறுத்தல்
பள்ளி துாய்மை கண்காணிக்க கல்வித்துறை அறிவுறுத்தல்
பள்ளி துாய்மை கண்காணிக்க கல்வித்துறை அறிவுறுத்தல்
பள்ளி துாய்மை கண்காணிக்க கல்வித்துறை அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 05, 2024 08:57 PM
உடுமலை: முதல் நாள் வகுப்புகளுக்கு, அரசு பள்ளிகளை தயாராக வைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அனைத்து அரசு பள்ளிகளிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பெறுதல், மறுசுழற்சி முறைகளின் முக்கியத்துவத்தை உணர்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து இயற்கைக்கு உகந்த மாற்றுபொருட்களை பயன்படுத்துவதற்கு ஊக்குவிப்பது, காய்கறி தோட்டம் அமைப்பது என, 'எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் படி, பள்ளி துவங்கும் நாளில் முழுவதும் துாய்மையாகவும், தயாராகவும் இருப்பதற்கு துாய்மைப்பணிகளை மேற்கொள்வதற்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், கட்டட பொறியாளர், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்கள் பார்வையிட்டு கண்காணிக்கவும் அட்டவணையும் வழங்கப்பட்டுள்ளது.