ADDED : ஜூன் 05, 2024 08:58 PM
உடுமலை: உடுமலையிலிருந்து கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை பஸ் ஸ்டாண்ட் வழியாக, பல்வேறு நகரங்களிலிருந்தும் நுாற்றுக்கணக்கான வெளியூர் பஸ்களும், டவுன்பஸ்களும் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் பஸ்களில் பயணம் செய்கின்றனர்.
உடுமலையிலிருந்து, பெதப்பம்பட்டி, கொங்கல்நகரம் வழியாக அடிவள்ளி செல்லும் வழித்தட எண் 31 பஸ் பல மாதங்களாக இயக்கப்படுவதில்லை. இதே போல், பிற கிராமங்களுக்கும், போதுமான பஸ்கள் இல்லை. இதனால், குறைந்த அளவில் இயக்கப்படும் டவுன் பஸ்களில் மக்கள் நின்று கொண்டும், இடநெருக்கடியில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
கோடை விடுமுறை முடிந்த பள்ளிகள் துவக்கவுள்ள நிலையில், தேவையான வழித்தடங்களில் பஸ்களை இயக்க போக்குவரத்துக்கழகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.