/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மழைக்காலத்தில் கதவு, ஜன்னல் விரியும்! பராமரிக்க 'டிப்ஸ்' வழங்குகிறார் பொறியாளர் பாலமுருகன் மழைக்காலத்தில் கதவு, ஜன்னல் விரியும்! பராமரிக்க 'டிப்ஸ்' வழங்குகிறார் பொறியாளர் பாலமுருகன்
மழைக்காலத்தில் கதவு, ஜன்னல் விரியும்! பராமரிக்க 'டிப்ஸ்' வழங்குகிறார் பொறியாளர் பாலமுருகன்
மழைக்காலத்தில் கதவு, ஜன்னல் விரியும்! பராமரிக்க 'டிப்ஸ்' வழங்குகிறார் பொறியாளர் பாலமுருகன்
மழைக்காலத்தில் கதவு, ஜன்னல் விரியும்! பராமரிக்க 'டிப்ஸ்' வழங்குகிறார் பொறியாளர் பாலமுருகன்
ADDED : ஜூன் 08, 2024 12:48 AM

மழை காலங்களில், மொட்டை மாடியில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன என்கிறார், கொசினா முன்னாள் தலைவர் பாலமுருகன்.
அவர் கூறியதாவது:
மழை காலங்களில், நம் வீட்டு மொட்டை மாடியில் போதிய கவனம் செலுத்த வேண்டும். இதற்கு பலர் முக்கியத்துவம் தருவதில்லை.
இங்கு சின்ன, சின்ன பராமரிப்புகள் மேற்கொள்வது அவசியம். மொட்டை மாடியில் மழை நீர் தேங்குவதை தவிர்க்க, மழை நீர் வடிகால் பைப் அமைக்கப்பட்டிருக்கும். சன் ஷேடில் இருக்கும் நீர் எப்படி வெளியே செல்கிறது என்பதை காண முடியும்.
வீட்டை சுற்றி மரம், செடிகள் வைத்திருப்போம். அதிலிருந்து விழும் சருகுகள், காற்றில் பறந்து வந்து மொட்டை மாடியில் சேகரமாகலாம். தவிர, வேண்டாத பொருட்களும் சேர்ந்து, மழை நீர் வெளியே செல்லக்கூடிய அமைப்பில் அடைப்பு ஏற்படக் கூடிய வாய்ப்பிருக்கிறது.
இதை கவனிக்காமல் விட்டால், நீர் தேங்கி நிற்பது தொடர்ந்தால், ஏதாவது ஒரு பகுதியில் 'ஏர் கிராக்' இருந்தால், அது சிலாப் வழியாகவோ, சுவர் வழியாகவோ நீர் வர வாய்ப்பிருக்கிறது. சுவர் வழியாக நீர் வரும் போது, பாதிப்பு ஏற்படலாம்.
மொட்டை மாடியில், ஒவ்வொரு 600 சதுரடிக்கும் ஒரு மழைநீர் வடிகால் பைப் வைக்க வேண்டும். இதுதான் மிகவும் சிறப்பாக இருக்கும். மொத்தமாக ஆயிரம் சதுரடிக்கு ஒரு பைப் வைத்தால், மழை அதிகமாக பொழியும் பட்சத்தில், இப்பாதை வழியாக செல்வது போதுமானதாக இருக்காது. அதே போல், வெளியேற்றக்கூடிய பைப் மூன்று இன்ச் பைப்பாக இல்லாமல், நான்கு இன்ச் பைப்பாக இருந்தால் நல்லது. அப்போது தான், மழைநீர் வடிகால் வழியாக நீர் விரைவாக வெளியேறும்.
மொட்டைமாடியில் தண்ணீர் செல்லும் பாதையில், அடைப்பு இருந்தால் அதை மழைக்கு முன்பே சுத்தம் செய்வது அவசியம். மழை நீர் தொட்டியில் தண்ணீர் சுத்தமாக நிரம்பும்.
மழை காலங்களில், வீட்டில் இருக்கும் மரக்கதவுகள், ஜன்னல்கள் லேசாக விரிவடையும். அதிலும் கொஞ்சம் பழைய கால வீடாக இருந்து, கதவு ஜன்னல்கள் பழையதாக இருந்தால், இன்னும் கூடுதல் கவனம் தேவை. கதவுகள் பக்கம் தண்ணீர் தேங்காமல், வெறும் மாப் கொண்டு துடைக்க வேண்டும். உலர்ந்த துணியை கொண்டு அவ்வப்போது சுத்தமாக துடைக்க வேண்டும். தரையையும் ஈரம் இல்லாமல் வைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.