/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஊராட்சியில் தொடர் தகராறு அ.தி.மு.க.,வில் இணைந்த தி.மு.க.,வினர் ஊராட்சியில் தொடர் தகராறு அ.தி.மு.க.,வில் இணைந்த தி.மு.க.,வினர்
ஊராட்சியில் தொடர் தகராறு அ.தி.மு.க.,வில் இணைந்த தி.மு.க.,வினர்
ஊராட்சியில் தொடர் தகராறு அ.தி.மு.க.,வில் இணைந்த தி.மு.க.,வினர்
ஊராட்சியில் தொடர் தகராறு அ.தி.மு.க.,வில் இணைந்த தி.மு.க.,வினர்
ADDED : ஜூன் 25, 2024 02:10 AM
கோவில்பாளையம்;சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த வெள்ளானைப்பட்டி ஊராட்சியில் தலைவராக தி.மு.க.,வைச் சேர்ந்த கவிதாவும், துணைத்தலைவராக ராஜனும் உள்ளனர்.
தலைவருக்கும், துணைத் தலைவருக்கும் தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டு வந்தது. இதனால் ஊராட்சி நிர்வாகம் ஸ்தம்பித்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து கோவை மாவட்ட கலெக்டர், ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவரின் அதிகாரங்களை முடக்கி உத்தரவு பிறப்பித்தார். வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் வெள்ளானைப்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவரும், தி.மு.க., எஸ். எஸ்.குளம் ஒன்றிய அவைத் தலைவருமான ராஜன் மற்றும் வெள்ளானைப்பட்டி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், ராஜேஸ்வரி உள்ளிட்ட 25 பேர் தி.மு.க.,விலிருந்து விலகி நேற்று முன்தினம் அ.தி.மு.க., வில் இணைந்தனர். அ.தி.மு.க.,வில் இணைந்தோருக்கு முன்னாள் அமைச்சர் வேலுமணி வாழ்த்து தெரிவித்தார்.