/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாவட்ட கிரிக்கெட் லீக் அப்பாசாமி அணி அசத்தல் மாவட்ட கிரிக்கெட் லீக் அப்பாசாமி அணி அசத்தல்
மாவட்ட கிரிக்கெட் லீக் அப்பாசாமி அணி அசத்தல்
மாவட்ட கிரிக்கெட் லீக் அப்பாசாமி அணி அசத்தல்
மாவட்ட கிரிக்கெட் லீக் அப்பாசாமி அணி அசத்தல்
ADDED : ஜூன் 26, 2024 01:46 AM

கோவை;மாவட்ட அளவிலான ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், அப்பாசாமி கிரிக்கெட் கிளப் மூன்று விக்கெட் வித்தியாசத்தில், ரத்தினம் கிரிக்கெட் கிளப் அணியை வீழ்த்தியது.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 'காசா கிராண்ட்' கோப்பைக்கான ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி, வட்டமலைபாளையம் ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி மைதானத்தில் நடந்தது. இதில் அப்பாசாமி கிரிக்கெட் கிளப் மற்றும் ரத்தினம் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த ரத்தினம் அணி, ஸ்ரீவரதனாவின் (70) பொறுப்பான ஆட்டத்தால் 40.2 ஓவர்களில் 166 ரன்கள் சேர்த்தது. அய்யப்பன் (32) நிதானமாக விளையாடினார்.
வெற்றி பெற 167 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய அப்பாசாமி அணிக்கு, பிரபு (31), பிரதீப் (36) ஆகியோர் கைகொடுக்க, 38 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.
இதேபோல், பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மைதானத்தில் நடந்த மற்றொரு போட்டியில், கோயம்புத்துார் ரைடர்ஸ் அணி, 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்.பி., குரூப்ஸ் அணியை வீழ்த்தியது.
முதலில் விளையாடிய கோயம்புத்துார் ரைடர்ஸ் அணி, 46.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 170 ரன்கள் சேர்த்தது. அணிக்காக, சரண் (39) பொறுமையாக விளையாடினார்.
அடுத்து விளையாடிய ஆர்.பி., குரூப்ஸ் அணியின் செந்தில் வேல் (52) மட்டும் போராட, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாயினர். இதனால், அந்த அணி 44 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.