Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கை முதலில் வருவோருக்கு முன்னுரிமை

அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கை முதலில் வருவோருக்கு முன்னுரிமை

அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கை முதலில் வருவோருக்கு முன்னுரிமை

அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கை முதலில் வருவோருக்கு முன்னுரிமை

ADDED : ஜூன் 28, 2024 11:34 PM


Google News
பெ.நா.பாளையம்;கோவை அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கை வாயிலாக நிரப்ப, முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.,) மாநில அளவிலான இணையதள கலந்தாய்வு சேர்க்கை, முதல் சுற்று நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள இடங்களை நேரடி சேர்க்கை வாயிலாக ஜூலை 1 முதல், 15 வரை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி கலந்தாய்வு சேர்க்கைக்கு மீதமுள்ள காலி இடங்களை முதலில் வருபவருக்கு, மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை அளித்து, 100 சதவீத சேர்க்கை இலக்கை எட்ட ஏதுவாக நேரடி சேர்க்கை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.டி.ஐ.,யில் சேரும் மாணவர்களுக்கு வரைபட கருவிகள், லேப்டாப், சைக்கிள், இலவச பஸ் பாஸ், சீருடைகள், காலணிகள், 750 ரூபாய் மாதாந்திர உதவித்தொகை, தகுதியான பெண்களுக்கு 1,000 ரூபாய் மாத உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, 88254 34331 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us