/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போதையால் மாறும் வாழ்க்கைப்பாதை! விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுரை போதையால் மாறும் வாழ்க்கைப்பாதை! விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுரை
போதையால் மாறும் வாழ்க்கைப்பாதை! விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுரை
போதையால் மாறும் வாழ்க்கைப்பாதை! விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுரை
போதையால் மாறும் வாழ்க்கைப்பாதை! விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுரை
ADDED : ஜூன் 28, 2024 11:36 PM

கருமத்தம்பட்டி:''போதைப் பொருட்கள் பயன்படுத்துபவர்களின் வாழ்க்கை சீரழிந்து விடும்,'' என, விழிப்புணர்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
கிட்டாம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் கருமத்தம்பட்டி போலீசார் சார்பில், போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. ஊராட்சி தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார்.
சுகாதாரத்துறை அலுவலர் ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் சண்முகவேலு பேசியதாவது:
பல்வேறு விதமான போதைப்பொருட்களால், இளைய சமுதாயம் பாதை மாறி சென்று வாழ்க்கை சீரழியும் நிலை உள்ளது. கண்காணிப்பும் கண்டிப்பும் இருந்தால் தான் இளையதலைமுறையை காப்பாற்ற முடியும். பெற்றோர் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும்.
சந்தேக நபர்கள் ஊருக்குள் திரிந்தால் போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும். போதைப் பொருட்களை பதுக்குபவர்கள், விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருட்கள் எந்த ரூபத்தில் ஊருக்குள் வராமல் இருக்க பொதுமக்கள் போலீசாருக்கு உதவ வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார். வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
எஸ்.ஐ., செல்வராஜ் நன்றி கூறினார்.