/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'சேதமடைந்த ரோட்டை விரைந்து சீரமைக்கணும்' 'சேதமடைந்த ரோட்டை விரைந்து சீரமைக்கணும்'
'சேதமடைந்த ரோட்டை விரைந்து சீரமைக்கணும்'
'சேதமடைந்த ரோட்டை விரைந்து சீரமைக்கணும்'
'சேதமடைந்த ரோட்டை விரைந்து சீரமைக்கணும்'
ADDED : ஜூலை 22, 2024 11:08 PM
கோவை;சேதமடைந்த ரோட்டை விரைந்து சீர் செய்ய, மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தினார்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட திருச்சி ரோட்டில் குடிநீர் திட்டப்பணிகள், பாதாள சாக்கடைப்பணிகள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பணிகள் நடந்து வருகின்றன.
இதன் காரணமாக, இப்பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதுதவிர, இந்த ரோடு மோசமான நிலையில் உள்ளதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
குழாய்கள் பதிக்கப்படுவதற்காக ரோடு தோண்டப்பட்டதால், பல்வேறு பகுதிகளிலும் மண் குவிந்து கிடக்கிறது. இதனால், வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.
இதைக்கருத்தில் கொண்டு, இந்த ரோட்டை சீர்செய்ய மாநகராட்சி சார்பில், ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், நேற்று திருச்சி ரோட்டில் ஆய்வு மேற்கொண்டார்.
குவிந்துள்ள மண்ணை அப்புறப்படுத்தி ரோட்டை சீர்செய்ய அறிவுறுத்தினார். பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார். மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், உதவி கமிஷனர்(கிழக்கு) முத்துசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.