/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பெல்ஜியத்தில் சர்வதேச ஸ்கேட்டிங் வெள்ளி வென்ற கோவை சிறுமி பெல்ஜியத்தில் சர்வதேச ஸ்கேட்டிங் வெள்ளி வென்ற கோவை சிறுமி
பெல்ஜியத்தில் சர்வதேச ஸ்கேட்டிங் வெள்ளி வென்ற கோவை சிறுமி
பெல்ஜியத்தில் சர்வதேச ஸ்கேட்டிங் வெள்ளி வென்ற கோவை சிறுமி
பெல்ஜியத்தில் சர்வதேச ஸ்கேட்டிங் வெள்ளி வென்ற கோவை சிறுமி
ADDED : ஜூலை 22, 2024 11:09 PM

கோவை:பெல்ஜியம் சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில், இந்தியாவுக்கு வெள்ளி வென்ற கோவை சிறுமியை உற்சாகமாக வரவேற்றனர்.
பெல்ஜியத்தில் சர்வதேச அளவிலான 'ஸ்ப்லாண்டர் கிராண்டு பிரிக்ஸ் 2024' என்ற, ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.
இதில் கோவையை சேர்ந்த, நான்காம் வகுப்பு மாணவி மேகா களமிறங்கினார்.
சர்வதேச அளவில், 55 வருடங்களாக நடைபெறும் இந்த போட்டியில், ஆறு சுற்றுகளில், 3 சுற்றுகளில் தங்கப்பதக்கமும், மூன்று சுற்றுகளில் வெள்ளி பதக்கமும் மேகா வென்றார்.
ஒட்டுமொத்த போட்டியின் முடிவில், இரண்டாம் இடத்தைப் பிடித்த மேகா, வெள்ளிக் கோப்பையை தட்டி சென்றார்.
சர்வதேச போட்டியில் பங்கேற்று, இந்தியாவுக்கு வெள்ளி கோப்பை பெற்று தந்த மேகாவை பலரும் பாராட்டினர்.
நடப்பாண்டில் இந்தியாவிலிருந்து பங்கு பெற்றவர்களில், இருவர் மட்டுமே இந்த ஸ்கேட்டிங்கில், கோப்பையை வென்றிருக்கின்றனர்.
இருவருமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். கோப்பையுடன் கோவை திரும்பிய மேகாவை, விமான நிலையத்தில் பெற்றோர், நண்பர்கள், பயிற்சியாளர்கள் பூங்கொத்து வழங்கி உற்சாகமாக வரவேற்றனர்.