/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பூச்சிகள் தாக்குதலால் சாகுபடியில் சேதம் பயிர் பாதுகாப்புக்கு அறிவுரை பூச்சிகள் தாக்குதலால் சாகுபடியில் சேதம் பயிர் பாதுகாப்புக்கு அறிவுரை
பூச்சிகள் தாக்குதலால் சாகுபடியில் சேதம் பயிர் பாதுகாப்புக்கு அறிவுரை
பூச்சிகள் தாக்குதலால் சாகுபடியில் சேதம் பயிர் பாதுகாப்புக்கு அறிவுரை
பூச்சிகள் தாக்குதலால் சாகுபடியில் சேதம் பயிர் பாதுகாப்புக்கு அறிவுரை
ADDED : ஜூன் 17, 2024 11:10 PM
பொள்ளாச்சி:ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை கையாண்டால், பூச்சிகளின் தாக்குதலால் ஏற்படும் இழப்பை தவிர்க்கலாம் என, விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், தென்னை, காய்கறி வகைகள் மற்றும் பயிறு வகைகள் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
அவற்றில், பயிர் வகைகளில் பூச்சிகள், நோய்கள், களைகள், எலிகள் மற்றும் தானிய சேமிப்பின் வாயிலாக, 18 சதவீத அளவில் இழப்பு ஏற்படுகிறது. அதிகளவில் பூச்சி, பூஞ்சாண மருந்துகள் உபயோகிப்பதால், பயிரில் தொடர்ந்து பல தீமைகள் ஏற்பட்டும் வருகின்றன.
பூச்சிக்கொல்லிகள், காற்று, நீர், மண்ணில் கலந்து இயற்கை சூழலையும் பெரிதும் பாதிக்கிறது.
நச்சுத்தன்மை உணவு பொருட்களில் தங்கி மக்களுக்கும், கால்நடைகளுக்கும் தீமை ஏற்படுகிறது.
இயற்கை சூழ்நிலையில், பயிரை சேதமாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தக்கூடிய ஒட்டுண்ணிகள் மற்றும் நன்மை செய்யும் பூச்சிகள் எண்ணிக்கையை மட்டுமே குறைக்கின்றன. எனவே, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை கையாள விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
வேளாண்துறையினர் கூறியதாவது:
பயிர்களில், சிலவகை பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதால், வேறுவகை பூச்சி எண்ணிக்கை பெருகி சேதம் ஏற்படுகின்றன. இதற்கு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
நோய் எதிர்ப்பு ரகங்களை தேர்வு செய்ய வேண்டும். நோய் பாதிக்கும் இடங்களில் நெருக்கி நடவு செய்தலை தவிர்க்க வேண்டும்.
இதனால், இலைகளின் நடுவில் காணும் காற்றின் ஈரப்பதம் குறைந்து நோய் உண்டாகும் சூழ்நிலையை தவிர்க்க முடியும். வயலில் களைக்கட்டுப்பாடு செய்ய வேண்டும்.
களை எடுக்கும்போது அடிதுார்களில் உள்ள காய்ந்த இலைகளையும் அகற்ற வேண்டும். இதன் வாயிலாக நோய் காரணிகளை நீக்க முடியும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.