/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நிலப்போர்வை அமைத்து பயிர்களை பாதுகாக்க அறிவுரை நிலப்போர்வை அமைத்து பயிர்களை பாதுகாக்க அறிவுரை
நிலப்போர்வை அமைத்து பயிர்களை பாதுகாக்க அறிவுரை
நிலப்போர்வை அமைத்து பயிர்களை பாதுகாக்க அறிவுரை
நிலப்போர்வை அமைத்து பயிர்களை பாதுகாக்க அறிவுரை
ADDED : ஜூன் 17, 2024 11:04 PM
பெ.நா.பாளையம்;விவசாயிகள் நிலப்போர்வை எனும் மூடாக்கு அமைத்து, பயிர்களை பாதுகாக்கலாம் என, முன்னோடி விவசாயிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
பயிர் சுழற்சியும், பல்லுயிர் பெருக்கமும், மண்வளத்தை காக்கும். மண்ணின் வளம் என்பது நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை பொறுத்தும், நீர் பிடிப்பு தன்மையை பொறுத்தும் மண்ணில் எஞ்சியுள்ள தாவர ஊட்டச்சத்துக்களின் அளவை பொறுத்தும் அமையும்.
கோடை காலத்தில் மண்ணின் வளத்துக்கு மூடு பயிர், ஊடு பயிர், நிலப்போர்வை உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை மண்ணின் வெப்பத்தினை கோடை காலத்தில் ஓரளவு தடுக்க பயன்படுகிறது. கரிம அளவு குறைந்து விடாமல் பாதுகாக்கிறது. நிலப் போர்வை அல்லது மூடாக்கு என்பது மண்ணில் சூரிய ஒளி நேரடியாக படுவதை தவிர்த்திடும். இவை தாவரங்களின் கழிவுகளாகவோ அல்லது எளிதில் மக்கக்கூடிய பொருள்களாகவோ இருக்கலாம்.
நிலப் போர்வை எனும் மூடாக்கால் மண்ணில் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும். மண்புழுக்களின் வளர்ச்சியை பாதிக்காமல், மண்வளம் பாதுகாக்கப்படும். நுண்ணுயிர்களின் கூடாரம் ஆகிய பழுத்த இலைகள், உரமாக நேரடியாக கிடைக்கும். களைகளை வளர விடாமல், தடுப்பதுடன் மண் அரிப்பும் தடுக்கப்படும் என முன்னோடி விவசாயிகள் கூறினர்.