ADDED : ஜூலை 25, 2024 10:51 PM
அன்னுார் : அன்னுாரில், 25வது நாளாக நேற்றும், வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டுவந்த, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்கள், கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்துள்ளன. ஜூலை 30 வரை கோர்ட் புறக்கணிப்பு என அறிவித்தனர். இதன்படி அன்னுார் கோர்ட்டில், 25வது நாளாக நேற்றும் வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலான வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன. கோர்ட்டில் பணிகள் பாதிக்கப்பட்டன.