/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளி குழந்தைகளுக்கு புத்தக சேமிப்பு உண்டியல் பள்ளி குழந்தைகளுக்கு புத்தக சேமிப்பு உண்டியல்
பள்ளி குழந்தைகளுக்கு புத்தக சேமிப்பு உண்டியல்
பள்ளி குழந்தைகளுக்கு புத்தக சேமிப்பு உண்டியல்
பள்ளி குழந்தைகளுக்கு புத்தக சேமிப்பு உண்டியல்
ADDED : ஜூலை 25, 2024 10:51 PM
மேட்டுப்பாளையம் : புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் நகரில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு, புத்தக சேமிப்பு உண்டியல் வழங்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் நகரில் அடுத்த மாதம், புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இதை அடுத்து மாணவர்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த, புத்தகங்களை வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காரமடை ஊராட்சி ஒன்றியம், ஓடந்துறை ஊராட்சி காந்தி நகரில் உள்ள, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் புத்தக வாசிப்பு மற்றும் புத்தக சேமிப்பு உண்டியல் வழங்கும் விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை புனித செல்வி தலைமை வகித்தார்.
அவர் பேசுகையில்,'புத்தகத் திருவிழாவில் அதிகமான புத்தகங்கள் வாங்க வேண்டும் என்றால், தற்போது இருந்து உங்களுக்கு வழங்கி உள்ள உண்டியலில், பணத்தை சேமித்து வைக்க வேண்டும்.
அப்போது தான் புத்தக திருவிழாவின்போது, தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை வாங்க முடியும்' என்றார்.
விழாவில், புத்தகத் திருவிழா குழு பொறுப்பாளர்கள், எம்.சி.மணி, மா.மணி, நகராட்சி ஊழியர் ஜெயராமன், ஆசிரியர் பயிற்றுநர் அல்லி ஆகியோர் பேசினர்.