/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நெருப்பு, ஆயில் இல்லாமல் உணவு சமைத்து சாதனை நெருப்பு, ஆயில் இல்லாமல் உணவு சமைத்து சாதனை
நெருப்பு, ஆயில் இல்லாமல் உணவு சமைத்து சாதனை
நெருப்பு, ஆயில் இல்லாமல் உணவு சமைத்து சாதனை
நெருப்பு, ஆயில் இல்லாமல் உணவு சமைத்து சாதனை
ADDED : ஜூலை 06, 2024 08:08 PM

சென்னை தீவுத்திடலில் கடந்த ஜூன் மாதம் 'நம் தமிழகம், நம் பெருமை' என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் கோவையை சேர்ந்த இயற்கை உணவு சமையல் கலைஞர் படையல் சிவக்குமார் தனது, 10 சமையல் கலைஞர்கள் கொண்ட குழுவினருடன் இணைந்து, 'நோ ஆயில், நோ பாயில்' என்ற ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட விழிப்புணர்வு உலக சாதனை படைத்தார்.
அப்போது அவர், நெருப்பில்லாமல், புகை இல்லாமல், 500க்கும் மேற்பட்ட உணவு வகைகளை சமைத்து அசத்தினார். இவரது விழிப்புணர்வு, பொது மக்களை வெகுவாக கவர்ந்தது.
சமையல் கலைஞர் படையல் சிவக்குமார் கூறியதாவது:
அடுப்பு மற்றும் எண்ணெய் இல்லாமல், சமையல் செய்யும் போது அதன் சத்து குறையாது, ஆரோக்கியமான முறையில் சமைக்கலாம். உணவின் தரம் எப்படியோ, அது போல தான் உடல் ஆரோக்கியம் இருக்கும். இந்த முறையில் சமைக்கும் போது, ஊட்டச்சத்து மற்றும் உயிர் சத்துக்கள் ஒரு போதும் குறையாது.
அடுப்பு மற்றும் எண்ணெய் பயன்படுத்தி, சமைத்தால் ஊட்டச்சத்து மற்றும் உயிர் சத்துக்கள் குறையும். எலுமிச்சம் பழச்சாறு, உப்பு நீர், மஞ்சள் நீர் என, 6 வகையான பொருட்களை பயன்படுத்தியும், எண்ணெய்-க்கு பதிலாக தேங்காய், கடலை, எள்ளு, முந்திரி, பாதாம் பருப்பு வகைகளை பயன்படுத்தியும் சமைக்கப்பட்டது.
இதன் வாயிலாக, எண்ணெய் வித்துக்கள் அதிக அளவில் கிடைக்கும். இதனால் கொழுப்புச்சத்து உருவாகாது. நல்ல கொழுப்பை பயன்படுத்துவதால் உடல் ஆரோக்கியமாக, நோயில்லாமல் வாழலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.