/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை மாவட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கோவை மாவட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு
கோவை மாவட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு
கோவை மாவட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு
கோவை மாவட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு
ADDED : ஜூலை 10, 2024 11:42 PM
கோவை : கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ராமநாதபுரம், அல்வேர்னியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நேற்று நடந்தது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி கண்காணிப்பில் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
கோவை மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலியிடங்கள் 154 உள்ளன. இதற்கான பொதுமாறுதல் கலந்தாய்வில் உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர்கள் 400 பேர் பங்கேற்றனர்.
இதில், பணி மூப்பு அடிப்படையில் 95 ஆசிரியர்கள் விருப்பமான இடங்களைத் தேர்வு செய்து பணி மாறுதல் ஆணை பெற்றனர். இதுதவிர தமிழில் 10, ஆங்கிலம் 3, கணிதம் 6, அறிவியல் 29, சமூக அறிவியலில் 11 என மொத்தம் 59 காலியிடங்கள் உள்ளன.
இந்த காலியிடங்கள், மாவட்டங்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் பூர்த்தி செய்யப்பட வாய்ப்புள்ளதாக, ஆசிரியர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், மாவட்ட சட்ட செயலாளர் ஸ்ரீ லதா, கலந்தாய்வு நடைபெறும் மையத்தில் இருந்து, பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கினார்.