/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காங்., கட்சியின் நகர நிர்வாகிகள் கூட்டம் காங்., கட்சியின் நகர நிர்வாகிகள் கூட்டம்
காங்., கட்சியின் நகர நிர்வாகிகள் கூட்டம்
காங்., கட்சியின் நகர நிர்வாகிகள் கூட்டம்
காங்., கட்சியின் நகர நிர்வாகிகள் கூட்டம்
ADDED : ஜூன் 25, 2024 01:50 AM
பொள்ளாச்சி:கோவை தெற்கு மாவட்ட காங்., கட்சியின் நகர, வட்டார தலைவர்கள் கூட்டம், மாவட்ட காங்., கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் பகவதி தலைமை வகித்தார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோதிமணி, பாலு முன்னிலை வகித்தனர். நகர, வட்டார தலைவர்கள் செந்தில்குமார், இஸ்மாயில், முருகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
லோக்சபா தேர்தலில், வெற்றி பெற்று தந்த எம்.பி., ராகுல், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. பொள்ளாச்சி தொகுதி எம்.பி., மற்றும் காங்., கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பி.,க்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில், காங்., கட்சி அதிக ஊராட்சிகளில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது. காமராஜர் பிறந்த நாள் விழாவை விமரிசையாக கொண்டாடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.