/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மூட்டை மூட்டையாக திடக்கழிவு; பொதுச்சுகாதாரம் பாதிப்பு மூட்டை மூட்டையாக திடக்கழிவு; பொதுச்சுகாதாரம் பாதிப்பு
மூட்டை மூட்டையாக திடக்கழிவு; பொதுச்சுகாதாரம் பாதிப்பு
மூட்டை மூட்டையாக திடக்கழிவு; பொதுச்சுகாதாரம் பாதிப்பு
மூட்டை மூட்டையாக திடக்கழிவு; பொதுச்சுகாதாரம் பாதிப்பு

ரோட்டில் பள்ளம்
பொள்ளாச்சி, மகாலிங்கபுரத்தில் இருந்து பல்லடம் ரோடு செல்லும் ரோட்டில் அதிகளவு பள்ளம் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் செல்லும் போது சிரமம் ஏற்படுகிறது. சில நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி ரோட்டை சீரமைக்க வேண்டும்.
குப்பைக்கு தீ வைப்பு
பொள்ளாச்சி, சமத்துார் ராம ஐயங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகே, ரோட்டோரம் குப்பை கொட்டப்பட்டுள்ளது. குப்பை முறையாக அகற்றப்படாமல் அவ்வப்போது தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. குப்பைக்கு தீ வைப்பதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுகாதாரம் பாதிப்பு
பொள்ளாச்சி, பாரதி வீதியில் ரோட்டோரத்தில் மூட்டை மூட்டையாக குப்பை அகற்றபடாமல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு துர்நாற்றம் வீசுகிறது. மற்றும் வாகனங்களில் செல்லும் போது காற்றுக்கு பறந்து வாகன ஓட்டுநர்கள் மீது குப்பை விழுகிறது. இதை நகராட்சி நிர்வாகம் முறையாக அகற்ற வேண்டும்.
ரோட்டில் தேங்கும் தண்ணீர்
பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், மழை காலத்தில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் ரோட்டில் செல்லும் வாகனங்கள் சிரமப்படுகின்றன. சில நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. எனவே, மழை நீர் தேங்கும் இடத்தை சீரமைக்க வேண்டும்.
பயணியர் இருக்கை சேதம்
கிணத்துக்கடவு, கோதவாடி - கப்பளாங்கரை செல்லும் ரோட்டில் உள்ள பயணியர் அமரும் இருக்கை சேதம் அடைந்து உள்ளதால், பஸ் பயணியர் இருக்கைகளை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். எனவே, இந்த இருக்கையை சீரமைக்க வேண்டும்.
விதிமீறும் வாகனங்கள்
உடுமலையில், பழநி ரோட்டின் ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், பிற வாகனங்கள் செல்ல முடிவதில்லை. போக்குவரத்து பிரச்னையும் ஏற்படுகிறது. இந்தவாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேம்பாலத்தில் கழிவு
பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில் உள்ள மேம்பாலத்தில், தேங்காய் மட்டை உள்ளிட்ட பொருட்கள் உள்ளன. இதனால், மேம்பாலத்தில் மழை நீர் வெளியேறும் பாதையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மேம்பாலத்திலுள்ள கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும்.
சீரமைக்கப்படாத ரோடு
தீபாலபட்டி, பஸ் ஸ்டாப் அருகே குடிநீர் குழாய் சீரமைப்பதற்கு குழி தோண்டப்பட்டது. குழாய் பணிகள் முடிந்த பின்னரும் ரோடு சீரமைக்கப்படவில்லை. நீண்ட நாட்களாக குழியும் மூடப்படாமல் உள்ளது. இதனால் பயணியர் நிழற்கூரையை பயன்படுத்த முடியாமல் உள்ளனர். இரவு நேரங்களில் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் குழியால் தடுமாறி விழுகின்றனர்.
கழிவு மண் அகற்றணும்
உடுமலை, பசுபதி வீதியில் தனியார் குடியிருப்புகளில் கட்டமைப்பு அப்புறப்படுத்தும் பணிகள் முறையான தடுப்பு நடவடிக்கைகளுடன் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் அப்பகுதியிலுள்ள மற்ற வீடுகளிலும், வணிக வளாகங்களிலும் கழிவு மண் நிரம்புகிறது. குழந்தைகளுக்கு சுவாசப் பிரச்னைகளும் ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பராமரிப்பில்லாத கழிப்பிடம்
உடுமலை அருகே மைவாடி ஊராட்சி நரசிங்காபுரத்தில், பெண்கள் கழிப்பிடம் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அப்பகுதி பெண்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதை ஊராட்சி நிர்வாகம் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதமடைந்த ரோடு
கணக்கம்பாளையம், எஸ்.வி.புரம் பி.வி., லே அவுட் பகுதியில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். பருவமழை நாட்களில் மழைநீர் முற்றிலுமாக சுழ்ந்து அவ்வழியாக மக்கள் செல்ல முடியாத வகையில் ரோடு சேதமாகிறது.
பொருட்கள் ஆக்கிரமிப்பு
உடுமலை, வ.உ.சி., வீதியில் வணிக கடைகள் ரோட்டை முழுவதுமாக ஆக்கிரமித்து பொருட்களை வைக்கின்றனர். வாகன ஓட்டுநர்களும் விதிமுறை மீறி ரோட்டில் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வாகனங்கள் ஆக்கிரமிப்பு
மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்டில், இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வருகின்றனர். இங்கு வரும் பொதுமக்கள் இதனால், பாதிக்கப்படுகின்றனர். பாதசாரிகள் நடப்பதற்கும் சிரமப்படுகின்றனர். பேரூராட்சி நிர்வாகத்தினர் வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.