/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதியேற்பு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதியேற்பு
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதியேற்பு
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதியேற்பு
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதியேற்பு
ADDED : ஜூன் 13, 2024 11:21 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்டில், குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, குழந்தைகள் உதவி மையம், 'ஆல் தி சில்ரன்' அமைப்பு சார்பில் நடந்த நிகழ்வுக்கு, மாவட்ட சமூக நல மற்றும் மகளிர் துறை அலுவலர் அம்பிகா தலைமை வகித்தார்.
இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை; 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன்; அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன்.
குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்ற சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். தமிழகத்தை குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக மாற்ற என்னால் இயன்றவரை பாடுபடுவேன் என, உறுதிமொழி ஏற்றனர்.
தொடர்ந்து, மக்களிடையே கையெழுத்து பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது. இதில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர் சேரன், குழந்தைகள் உதவி மைய ஒருங்கிணைப்பாளர் ஏஞ்சலின், கோவை 'ஆல் தி சில்ரன்' மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.