/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இரவில் பெய்த மழை குளிர்ந்தது கோவை இரவில் பெய்த மழை குளிர்ந்தது கோவை
இரவில் பெய்த மழை குளிர்ந்தது கோவை
இரவில் பெய்த மழை குளிர்ந்தது கோவை
இரவில் பெய்த மழை குளிர்ந்தது கோவை
ADDED : ஜூன் 26, 2024 02:16 AM
கோவை;நேற்று இரவு பெய்த மழையால் கோவை குளிர்ந்தது.
கோவையில் கடந்த சில நாட்களாக அவ்வபோது சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை முதலே பெரும்பாலான பகுதிகளில் வெயில் குறைந்து வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இருந்தது.
இரவு காந்திபுரம், ரேஸ்கோர்ஸ் ஆர்.எஸ்.,புரம், பூமார்க்கெட், மசக்காளிபாளையம், ராமநாதபுரம், உக்கடம், போத்தனுார், இடையர்பாளையம், வேலாண்டிபாளையம், கவுண்டம்பாளையம், உட்பட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. சில தாழ்வான இடங்களிலும், சாலையோரங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது.
திடீரென பெய்த மழையால் கோவை குளிர்ந்தது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.