/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை வக்கீல்கள் டில்லியில் போராட்டம் கோவை வக்கீல்கள் டில்லியில் போராட்டம்
கோவை வக்கீல்கள் டில்லியில் போராட்டம்
கோவை வக்கீல்கள் டில்லியில் போராட்டம்
கோவை வக்கீல்கள் டில்லியில் போராட்டம்
ADDED : ஜூலை 28, 2024 09:02 PM
கோவை;கோவை வக்கீல்கள் டில்லியில், இன்று போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
மத்திய அரசு இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, 3 புதிய சட்டங்களை நிறைவேற்றியது. இந்த புதிய சட்டங்கள் கடந்த, 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இந்த புதிய சட்டங்களை ரத்து செய்யக்கோரி, இதற்காக கோவையில் இருந்து, 64 வக்கீல்கள் ரயிலில் டில்லி புறப்பட்டு சென்றனர். 20 வக்கீல்கள் விமானத்தில் புறப்பட்டு சென்றனர். மொத்தம், 84 வக்கீல்கள் டில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில், இன்று போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.