/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை கிழக்கு ரோட்டரி தொழில் சார் சிறப்பு விருது கோவை கிழக்கு ரோட்டரி தொழில் சார் சிறப்பு விருது
கோவை கிழக்கு ரோட்டரி தொழில் சார் சிறப்பு விருது
கோவை கிழக்கு ரோட்டரி தொழில் சார் சிறப்பு விருது
கோவை கிழக்கு ரோட்டரி தொழில் சார் சிறப்பு விருது
ADDED : ஜூன் 20, 2024 05:42 AM

கோவை,: கோவை கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில், தொழில் சார் சிறப்பு விருது வழங்கும் விழா, ரேஸ்கோர்ஸில் உள்ள காஸ்மோபாலிட்டன் கிளப் ஜி.வி.ஹாலில் நடந்தது.
கோவை கிழக்கு ரோட்டரி சங்க தலைவர் ஈஸ்வரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக, மாவட்ட ஆளுநர் (நியமனம்) செல்லா ராகவேந்திரன் பங்கேற்று, மருத்துவத் துறையில் டாக்டர் சுதந்திரா தேவி மற்றும் டாக்டர் மகேஸ்வரன், விளையாட்டு துறையில் தனுஷ், பிசியோதெரபி துறையில் முருகபிரபு ஆகியோருக்கு, தொழில் சார் சிறப்பு விருதுகள் வழங்கினார்.
சங்க செயலாளர் கோகுல் ராமன், நிர்வாகிகள் செல்வகுமார், சஞ்சீவிகுமார், கார்த்திக் நரேன் உட்பட பலர் பங்கேற்றனர்.