/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உதவி பெறும் பள்ளிகளுக்கு கோவை கலெக்டர் திடீர் விசிட் உதவி பெறும் பள்ளிகளுக்கு கோவை கலெக்டர் திடீர் விசிட்
உதவி பெறும் பள்ளிகளுக்கு கோவை கலெக்டர் திடீர் விசிட்
உதவி பெறும் பள்ளிகளுக்கு கோவை கலெக்டர் திடீர் விசிட்
உதவி பெறும் பள்ளிகளுக்கு கோவை கலெக்டர் திடீர் விசிட்
ADDED : ஜூலை 03, 2024 02:43 AM
நெகமம்;கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் திடீர் விசிட் செய்தார்.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியில், தமிழக அரசு சார்பில் காலை உணவு திட்டம் வரும், 15ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 9 அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளிகள் காலை உணவு திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதை தொடர்ந்து, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், நேற்று சோழனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பழனிக்கவுண்டன்புதூர் மற்றும் கக்கடவு ஊராட்சியில் உள்ள அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, சமையல் கூடம், பள்ளி வகுப்பு அறை, புதிதாக சமையல் செய்யும் அறை ஆகியவற்றை ஆய்வு செய்தார். அங்குள்ள சத்துணவு கூடத்தில் மாணவர்களுக்கு வழங்கும் மதிய உணவு சாப்பிட்டு தரத்தை ஆய்வு செய்தார். பள்ளி மாணவர்களிடையே உரையாற்றினார்.
இந்த ஆய்வில், வட்டார கல்வி அலுவலர்கள் மகேஸ்வரன், எடிசன் பெர்னட், கிணத்துக்கடவு தாசில்தார் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதீஸ்குமார், விஜய்குமார், ஊராட்சி தலைவர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.