/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புகையிலை ஒழிப்பில் சிறப்பு :கோவைக்கு பாராட்டு சான்றிதழ் புகையிலை ஒழிப்பில் சிறப்பு :கோவைக்கு பாராட்டு சான்றிதழ்
புகையிலை ஒழிப்பில் சிறப்பு :கோவைக்கு பாராட்டு சான்றிதழ்
புகையிலை ஒழிப்பில் சிறப்பு :கோவைக்கு பாராட்டு சான்றிதழ்
புகையிலை ஒழிப்பில் சிறப்பு :கோவைக்கு பாராட்டு சான்றிதழ்
ADDED : ஜூன் 03, 2024 01:21 AM
கோவை;புகையிலை ஒழிப்பில் சிறந்து விளங்கியதாக, கோவைக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
புகையிலை இல்லா தமிழகத்தை உருவாக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகயை எடுத்து வருகிறது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் பொது சுகாதாரத்துறை சார்பில் புகையிலை ஒழிப்புக்காக அதிக விழிப்புணர்வு, அதிக அபராதம், புகையிலை இல்லா கல்வி நிறுவனம் கொண்ட மாவட்டத்தை உருவாக்கிய மாவட்ட சுகாதாரத் துறையை பாராட்டி சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த, 2023-2024ம் நிதியாண்டில், கோவை மாவட்ட சுகாதாரத் துறை, புகையிலை விற்பனையில் ஈடுபட்டவர்களுக்கு, ரூ.7.28 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
579 பேரை புகையிலை பயன்பாட்டில் இருந்து மீட்டுள்ளது-. 1,343 பள்ளிகளுக்கு, புகையிலை பயன்பாடு இல்லாத பள்ளி என சான்றிதழ் வழங்கிள்ளது. இதை பாராட்டி பொது சுகாதாரத் துறை, கோவை மாவட்ட சுகாதாரத் துறைக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது.
உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம், கோவை மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் அருணாவுக்கு சிறந்த மாவட்டத்திற்கான சான்றிதழை வழங்கினார்.