/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சட்டவிரோதமாக பட்டாசு பதுக்கிய நால்வர் மீது வழக்கு சட்டவிரோதமாக பட்டாசு பதுக்கிய நால்வர் மீது வழக்கு
சட்டவிரோதமாக பட்டாசு பதுக்கிய நால்வர் மீது வழக்கு
சட்டவிரோதமாக பட்டாசு பதுக்கிய நால்வர் மீது வழக்கு
சட்டவிரோதமாக பட்டாசு பதுக்கிய நால்வர் மீது வழக்கு
ADDED : ஜூலை 15, 2024 02:33 AM
அன்னுார்;கஞ்சப்பள்ளி பகுதியில், சட்டவிரோதமாக பட்டாசு பதுக்கிய நான்கு பேர் மீது அன்னுார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கஞ்சப்பள்ளியில் கணேசமூர்த்தி என்பவரது தோட்டத்து குடோனில் சசிகுமார் என்பவர் பதுக்கி வைத்திருந்த பட்டாசு நேற்று முன்தினம் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு துறையினர் நான்கு மணி நேரம் போராடி தீயை அனைத்தனர்.
விசாரணையில், அதே பகுதியில் மேலும் ஒரு குடோனிலும், நீலகண்டன் புதுாரில் ஒரு குடோனிலும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசு அனுமதி இன்றி வைக்கப்பட்டது தெரிய வந்தது. இரண்டு குடோன்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.
பட்டாசு பதுக்கி வைத்த அன்னுார் சசிகனி, 27. கஞ்சப்பள்ளி கணேஷ மூர்த்தி, 54. ரத்தினசாமி, 56. நீலகண்டன்புதுார் சுப்பிரமணியம், 65. ஆகிய நான்கு பேர் மீது அன்னுார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.