/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை
5 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை
5 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை
5 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை
ADDED : ஜூலை 15, 2024 02:33 AM

சூலுார்;சூலுாரில், 250 பேர் சேர்ந்து, ஐந்து மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி நோபல் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்.
சூலுார் அடுத்த கண்ணம்பாளையத்தில் உள்ள ஆதி தமிழன் வீர சிலம்பாட்ட கலைக்கூடம் உள்ளது. இங்கு சிறுவர் முதல் பெரியவர் வரை சிலம்பாட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. சிலம்பாட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சிலம்ப ஆசான் நாக சுந்தரம் சாதனை முயற்சி செய்யும் வகையில், தங்களது மாணவர்கள், 250 பேரை ஒன்றிணைத்து, ஐந்து மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளனர். பீடம்பள்ளி அருகே உள்ள சுகப்பிரம்ம மகரிஷி வித்யாலயா பள்ளி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், சிலம்பம் சுற்றி, நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர். அதற்கான சான்றிதழ்களை நோபல் உலக சாதனை புத்தக நிர்வாகிகள் வழங்கினர்.