ADDED : ஜூலை 24, 2024 01:05 AM

தமிழ்நாடு தங்க நகை வியாபாரிகள் சம்மேளனம் தலைவர் சபரிநாத் : தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி சுங்கவரி, 6 சதவீதமாகவும், பிளாட்டினத்துக்கான வரி, 6.4 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கம், வெள்ளி விலை குறையும். இதனால் வியாபாரிகளுக்கும், சாமானிய மக்களுக்கும் நன்மை கிடைக்கும். மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
ஸ்டார்ட் அப் இந்தியா மற்றும் ஸ்கில் இந்தியா ஆலோசகர் ஜெயபிரகாஷ்: ஸ்டார்ட் அப் களின் முதலீடு செய்யும் ஏஞ்சல் இன்வெஸ்டர்களுக்கான வரி முழுமையாக ரத்து செய்ததால், மேலும் பல முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கான சூழல் உருவாகியுள்ளது. ஸ்கில் இந்தியாவில் 1.48 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதால், மேலும் பல மாணவர்கள் தங்கள் திறமையை மேம்படுத்துவதற்கான ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இது தொழில் சார்ந்தது மட்டுமல்லாமல், மாணவர்கள் நலம் சார்ந்த ஒரு பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது.