/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அடிப்படை வசதி கோரி பா.ஜ., ஆர்ப்பாட்டம் அடிப்படை வசதி கோரி பா.ஜ., ஆர்ப்பாட்டம்
அடிப்படை வசதி கோரி பா.ஜ., ஆர்ப்பாட்டம்
அடிப்படை வசதி கோரி பா.ஜ., ஆர்ப்பாட்டம்
அடிப்படை வசதி கோரி பா.ஜ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 18, 2024 10:37 PM

கருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டி நால்ரோட்டில் அடிப்படை வசதிகளை செய்யாத நிர்வாகங்களை கண்டித்து, பா.ஜ., வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கருமத்தம்பட்டி நால் ரோட்டில், பொதுக்கழிப்பிடம், குடிநீர் வசதி செய்து தர பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல், கருமத்தம்பட்டி நால்ரோட்டுக்கு வராமல், மேம்பாலத்தின் மீதே பஸ் சென்று வருவதால், பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்னை குறித்து பா.ஜ., சார்பில், மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து கழகம், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து, கருமத்தம்பட்டியில் பா.ஜ., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவை வடக்கு மாவட்ட மகளிரணி தலைவர் ரேவதி தலைமை வகித்தார். மாவட்ட விவசாய அணி பொதுச்செயலாளர் ஆர்த்தி ரவி, மகளிர் அணி பொருளாளர் கார்த்திகேயினி, மண்டல தலைவர் மதுமிதா, செயலாளர் சாந்தி, சண்முகசுந்தரம், அவிநாசியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிர்வாகிகள் கூறுகையில், ''நால்ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பொதுக்கழிப்பிடம் அமைக்க வேண்டும். குடிநீர் வசதி செய்து தர வேண்டும். வெளியூர் பஸ்கள், நால்ரோட்டுக்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருமத்தம்பட்டி வழியாக கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். மேல்நிலைப்பள்ளி துவக்க வேண்டும்,'' என்றனர்.