/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆழியாறில் சுற்றுலா பயணியர் குதுாகலம் ஆழியாறில் சுற்றுலா பயணியர் குதுாகலம்
ஆழியாறில் சுற்றுலா பயணியர் குதுாகலம்
ஆழியாறில் சுற்றுலா பயணியர் குதுாகலம்
ஆழியாறில் சுற்றுலா பயணியர் குதுாகலம்
ADDED : ஜூன் 17, 2024 11:25 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, ஆழியாறுஅணை மற்றும் பூங்காவிற்கு, கடந்த மூன்று தினங்களில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் வருகை புரிந்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள, ஆழியாறு, வால்பாறைக்கு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், அதிகப்படியான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.
கடந்த மூன்று தினங்களாக, ஆழியாறு அணை மற்றும் பூங்காவிற்கு, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் வந்து சென்றனர்.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஆழியாறு மற்றும் வால்பாறை பகுதிக்கு, வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், சுற்றுலா பயணியர் வருகை வழக்கத்தை விட அதிகம் காணப்படும். அதில், கோடை விடுமுறையின் போது, வெயிலின் தாக்கம் அதிகம் காரணமாக பலரும், வால்பாறை செல்லவே விருப்பம் காட்டினர்.
இந்நிலையில், கோடை மழைக்கு பின், பூங்காவில், மரங்கள், செடிகள் பசுமைக்கு திரும்பி ரம்மியாக உள்ளது. தற்போது, கவியருவிக்கு செல்ல தடை நீடிப்பதால், வெளியூர் மட்டுமின்றி உள்ளூர் மக்கள் பலரும் பூங்காவில் பொழுதை கழிக்கின்றனர்.
நேற்று, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, அதிகப்படியான சுற்றுலாப் பயணியர் பூங்காவிற்கு வந்தனர். பூங்கா வழியாக செல்லும் தண்ணீரில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர்.
இவ்வாறு, கூறினர்.