Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சாம்பல் விற்பனை வருவாய் ரூ.200 கோடியை தாண்டியது

சாம்பல் விற்பனை வருவாய் ரூ.200 கோடியை தாண்டியது

சாம்பல் விற்பனை வருவாய் ரூ.200 கோடியை தாண்டியது

சாம்பல் விற்பனை வருவாய் ரூ.200 கோடியை தாண்டியது

ADDED : ஜூலை 04, 2024 04:42 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: தமிழக மின்வாரியத்திற்கு, சேலம் மாவட்டம் மேட்டூரில், 1,440 மெகாவாட்; துாத்துக்குடியில், 1,050; திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில், 1,830 மெகாவாட் திறனில், அனல்மின் நிலையங்கள் உள்ளன.

அவற்றில், மின் உற்பத்திக்கு எரிபொருளாக தினமும் சராசரியாக, 60,000 டன் நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. அதிலிருந்து, பல நுாறு டன், உலர் சாம்பல் வெளியேறுகிறது.

மொத்த சாம்பலில், 20 சதவீதம் செங்கல் தயாரிப்பு உள்ளிட்ட சிறு தொழில்களுக்கு இலவசமாக தரப்படுகிறது. மீதி, அதிக விலை கோரும் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. இதில், குறைந்த விலைக்கு, எடை குறைவாக வழங்குவது உள்ளிட்ட முறைகேடுகள் நடந்தன. இதனால், வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இதைத் தடுக்க, கடந்த இரு ஆண்டுகளாக சிமென்ட், கல்நார் ஷீட் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, நீண்டகால ஒப்பந்தங்கள் வாயிலாக, சாம்பல் விற்கப்படுகிறது. மேலும், சாம்பல் பிரிவில் ஒருவர், மூன்று ஆண்டுகளுக்கு மேல்பணிபுரிய தடை விதிக்கப் பட்டது.

இதுபோன்ற காரணங்களால், சாம்பல் விற்பனை வருவாய் முதல் முறையாக, 2022 - 23ல், 218 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஆண்டு வாரியாக வருவாய் - ரூபாய் கோடியில்

2019/20 - 92.812020/21 - 92.902021/22 - 1222022/23 - 1902023/24 - 218







      Our Apps Available On




      Dinamalar

      Follow us