/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு விளையாட்டுப் போட்டிகள் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு விளையாட்டுப் போட்டிகள்
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு விளையாட்டுப் போட்டிகள்
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு விளையாட்டுப் போட்டிகள்
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு விளையாட்டுப் போட்டிகள்
ADDED : ஜூலை 19, 2024 10:56 PM
பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள யுனைடெட் கல்வி நிறுவனங்களின் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு விளையாட்டுப் போட்டிகள் நடக்கின்றன.
யுனைடெட் கல்வி நிறுவனங்களின் சார்பில், மாவட்ட அளவிலான, 19 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கால்பந்து மற்றும் வாலிபால் போட்டிகளும், பெண்களுக்கான வாலிபால் போட்டிகளும், கல்லுாரி வளாகத்தில் வரும், 23ம் தேதி முதல், 25ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கின்றன.
போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளி அணிகள், தங்களது கல்வி நிறுவனத்தின் ஒப்புகையுடன் பதிவு செய்யும் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். போட்டியில் பங்குபெறும் அனைத்து அணிகளுக்கும், பங்கேற்பு சான்றிதழ் மற்றும் போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்படும் என, கல்லுாரி நிர்வாகம் அறிவித்துள்ளது. பங்கேற்க விரும்பும் அணிகள் வரும், 21ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், விபரங்களுக்கு, 98657 06011 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.