/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கார் கண்ணாடி உடைப்பு மேலும் ஒருவர் கைது கார் கண்ணாடி உடைப்பு மேலும் ஒருவர் கைது
கார் கண்ணாடி உடைப்பு மேலும் ஒருவர் கைது
கார் கண்ணாடி உடைப்பு மேலும் ஒருவர் கைது
கார் கண்ணாடி உடைப்பு மேலும் ஒருவர் கைது
ADDED : ஜூன் 20, 2024 05:37 AM
போத்தனூர், : கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் அஸ்லாம் சித்திக். கடந்த வாரம் தனது நண்பர்களுடன் பெங்களூரு சென்றுவிட்டு, காரில் கேரளாவுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். எல் அண்ட் டி பை-பாஸ் சாலையில், பாலத்துறை பிரிவு அருகே, மூன்று கார்களில் வந்த நபர்கள், இவரது காரை வழிமறித்து முன் கண்ணாடியை உடைத்தனர்.
இதுகுறித்து அஸ்லாம் சித்திக், மதுக்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். விசாரித்த போலீசார், ராணுவ வீரர் விஷ்ணு உட்பட, நான்கு பேரை கடந்த இரு நாட்களுக்கு முன், கைது செய்து சிறையிலடைத்தனர்.
தொடர்ந்து நேற்று பாலக்காடு, கரியகாட்டு வரம்பை சேந்த டிரைவர் விஷ்ணு, 28 என்பவரை கைது செய்தனர்.
கார்களின் உரிமையாளர்களான அஜய் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய, மேலும் ஒருவரை தேடுகின்றனர்.