/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கன்டெய்னர் லாரி மோதி 30 ஆண்டு மரம் சாய்ந்தது கன்டெய்னர் லாரி மோதி 30 ஆண்டு மரம் சாய்ந்தது
கன்டெய்னர் லாரி மோதி 30 ஆண்டு மரம் சாய்ந்தது
கன்டெய்னர் லாரி மோதி 30 ஆண்டு மரம் சாய்ந்தது
கன்டெய்னர் லாரி மோதி 30 ஆண்டு மரம் சாய்ந்தது
ADDED : ஜூன் 20, 2024 05:39 AM
திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில், கன்டெய்னர் லாரி மோதியதில், 30 ஆண்டு கால மரம் சாய்ந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, திருப்பூர் திருப்பதி கோவில் அருகே, 30 ஆண்டு கால வேப்ப மரம் உள்ளது. அவ்வழியாக வந்த கன்டெய்னர் லாரி, வேப்ப மரம் மீது பலமாக மோதி விட்டு சென்றது. அதில், சாய்ந்த மரம், தொடர்ந்து முறிந்து கீழே விழும் நிலைக்கு சென்றது.
போலீசார், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் அப்பகுதியில் போக்கு வரத்தைதடை செய்து, வாகனங்களை மாற்று வழியில் அனுப்பினர். மின்சாரத்தை துண்டித்து விட்டு, மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் திருப்பூர் வடக்கு தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.