/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ முன்னாள் எம்.பி., மாஸ்டர் மாதனை நலம் விசாரித்த அண்ணாமலை முன்னாள் எம்.பி., மாஸ்டர் மாதனை நலம் விசாரித்த அண்ணாமலை
முன்னாள் எம்.பி., மாஸ்டர் மாதனை நலம் விசாரித்த அண்ணாமலை
முன்னாள் எம்.பி., மாஸ்டர் மாதனை நலம் விசாரித்த அண்ணாமலை
முன்னாள் எம்.பி., மாஸ்டர் மாதனை நலம் விசாரித்த அண்ணாமலை
ADDED : ஜூலை 23, 2024 12:14 AM

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ்காலனி, பாலாஜி கார்டனில் வசிக்கும் முன்னாள் எம்.பி., மாஸ்டர் மாதனை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சந்தித்து நலம் விசாரித்தார்.
மாஸ்டர் மாதன், நீலகிரி தொகுதி எம்.பி.,யாக கடந்த, 98, 99 ஆண்டுகளில் பதவி வகித்தவர். தற்போது, 93 வயதாகும் இவர் பிரஸ் காலனி, பாலாஜி கார்டனில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார்.
உடல் நலம் குன்றிய நிலையில், சிகிச்சை பெற்று வரும் மாஸ்டர் மாதனை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து, நலம் விசாரித்தார். சுமார் ஒரு மணி நேரம் அவரது வீட்டில் இருந்த அண்ணாமலை, மாஸ்டர் மாதனின் உறவினர்கள், நண்பர்கள், பா.ஜ., கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் பேசிவிட்டு, கோவை புறப்பட்டு சென்றார்.