/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு: அரசு கல்லுாரியில் 10ல் துவக்கம் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு: அரசு கல்லுாரியில் 10ல் துவக்கம்
மாணவர் சேர்க்கை கலந்தாய்வு: அரசு கல்லுாரியில் 10ல் துவக்கம்
மாணவர் சேர்க்கை கலந்தாய்வு: அரசு கல்லுாரியில் 10ல் துவக்கம்
மாணவர் சேர்க்கை கலந்தாய்வு: அரசு கல்லுாரியில் 10ல் துவக்கம்
ADDED : ஜூன் 07, 2024 11:20 PM
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 10ம் தேதியிலிருந்து, 15ம் தேதி வரை பொது பிரிவினர் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
வரும் 10ம் தேதி, காலை, 10:00 மணியிலிருந்து, பி.எஸ்.சி., வேதியியல், கணிதம், இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாட வகுப்புகளுக்கான பொது பிரிவினர் மாணவர் சேர்க்கைக்கான, கலந்தாய்வு நடைபெற உள்ளது. 11ம் தேதி காலை பி.காம்., பி.காம்., சி.ஏ., பி.ஏ., ஆங்கிலம், பொருளியல், சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை துறைக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது. 12ம் தேதியிலிருந்து, 15ம் தேதி முடிய ஆகிய நான்கு நாட்கள், அனைத்து பாட வகுப்புகளில் உள்ள, காலியிடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது. எனவே, கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள், இணையதள விண்ணப்பம், கலந்தாய்வு அழைப்பு கடிதம், மாற்றுச் சான்றிதழ், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பதினொன்றாம், பத்தாம் வகுப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் நகல், ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ், 5 போட்டோக்கள் எடுத்து வர வேண்டும். மேலும் அனைத்து சான்றிதழ்களிலும் நான்கு ஜெராக்ஸ் எடுத்து வர வேண்டும். இவ்வாறு முதல்வர் கானப்பிரியா தெரிவித்துள்ளார்.