/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பருவ மழை எதிரொலி துளிர்விடும் தேயிலை பருவ மழை எதிரொலி துளிர்விடும் தேயிலை
பருவ மழை எதிரொலி துளிர்விடும் தேயிலை
பருவ மழை எதிரொலி துளிர்விடும் தேயிலை
பருவ மழை எதிரொலி துளிர்விடும் தேயிலை
ADDED : ஜூலை 10, 2024 10:21 PM

வால்பாறை : வால்பாறையில் பரவலாக பெய்யும் பருவமழையால் தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விடத் துவங்கியுள்ளன.
வால்பாறையில் மொத்தம், 32,825 ஹெக்டேரில் தேயிலை, காபி, ஏலம், மிளகு போன்றவை பயிரிடப்பட்டுள்ளன. இதில், தேயிலை மட்டும், 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது தென்மேற்குப் பருவமழை பரவலாக பெய்யும் நிலையில், தேயிலை செடிகள் துளிர் விட்டு, பசுமையாக காட்சியளிக்கிறது.
இது குறித்து, தோட்ட அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையில் இந்த ஆண்டு பெய்யும் தென்மேற்குப் பருவமழைக்கு இடையே அடிக்கடி வெயில் நிலவுவதால், தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விடத் துவங்கியள்ளன.
நோய் தாக்குதலில் இருந்து தேயிலை செடிகளை பாதுகாக்க, உபாசி தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவுரையின் படி, பூச்சிக்கொல்லி மருந்தும் அவ்வப்போது தெளிக்கப்படுகிறது,' என்றனர்.