/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வன எல்லை கிராமங்களில் புகுந்த யானைக்கூட்டம் வன எல்லை கிராமங்களில் புகுந்த யானைக்கூட்டம்
வன எல்லை கிராமங்களில் புகுந்த யானைக்கூட்டம்
வன எல்லை கிராமங்களில் புகுந்த யானைக்கூட்டம்
வன எல்லை கிராமங்களில் புகுந்த யானைக்கூட்டம்
ADDED : ஜூன் 13, 2024 11:23 PM

உடுமலை : உடுமலை அருகே, யானைக்கூட்டம் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தியது.
உடுமலை அருகே, வன எல்லை கிராமமான வலையபாளையம் பகுதியிலுள்ள விவசாய நிலங்களுக்குள், காட்டு யானைக்கூட்டம் புகுந்தது. அங்கிருந்த விவசாயிகளின் தோட்டத்திற்குள் நுழைந்து, தென்னை மரங்களை சேதப்படுத்தின.
மேலும், சோலார் மின் வேலி மற்றும் கம்பி வேலிகளையும் சேதப்படுத்தின. இரவு நேரங்களில், யானைக்கூட்டம், திருமூர்த்திமலை, வலையபாளையம், ராவணாபுரம் உள்ளிட்ட கிராம பகுதிகளுக்குள் புகுந்து வருவதால், வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், உரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.