/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இரவில் அடுத்தடுத்த வீடுகளுக்குள் புகுந்த கொள்ளை கும்பல்; போலீசார் துரத்தி சென்ற நிலையில் தப்பினர் இரவில் அடுத்தடுத்த வீடுகளுக்குள் புகுந்த கொள்ளை கும்பல்; போலீசார் துரத்தி சென்ற நிலையில் தப்பினர்
இரவில் அடுத்தடுத்த வீடுகளுக்குள் புகுந்த கொள்ளை கும்பல்; போலீசார் துரத்தி சென்ற நிலையில் தப்பினர்
இரவில் அடுத்தடுத்த வீடுகளுக்குள் புகுந்த கொள்ளை கும்பல்; போலீசார் துரத்தி சென்ற நிலையில் தப்பினர்
இரவில் அடுத்தடுத்த வீடுகளுக்குள் புகுந்த கொள்ளை கும்பல்; போலீசார் துரத்தி சென்ற நிலையில் தப்பினர்
ADDED : ஜூன் 13, 2024 11:22 PM

உடுமலை : மடத்துக்குளம், எஸ்.ஆர்., லே - அவுட் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, அடுத்தடுத்த வீடுகளுக்குள், ஸ்வட்டர் மற்றும் குல்லா முகமூடி அணிந்த, 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் புகுந்தது.
முதலில், பூட்டியிருந்த இரண்டு வீட்டு கதவுகளை உடைத்துள்ளனர், அங்கு யாரும் வசிக்காத நிலையில், அடுத்ததாக இருந்த அபிபுர்ரகுமான், 49, வீட்டிற்குள் புகுந்து, முன் பக்க கதவு மற்றும் பீரோவை உடைத்து, ரூ.4 ஆயிரம் ரூபாயை திருடியுள்ளனர்.
அடுத்து, அருகிலிருந்த சிவானந்தம், 78, வீட்டிற்குள் புகுந்து, வெளியில் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனங்களையும் திருடிச்சென்றனர். அடுத்து, மணிமேகலை, 58, வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.
மேல் மாடியில் குடும்பத்தினருடன் துாங்கிக்கொண்டிருந்த நிலையில், கதவு உடைக்கும் சத்தம் கேட்டு, அருகிலுள்ளவர்களை போனில் அழைத்துள்ளனர். உடனடியாக போலீசாருக்கு அவர்கள் தகவல், கொடுத்ததும், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.
இதனை பார்த்த முகமூடி கும்பல், திருடிய வாகனத்தை எடுத்துக்கொண்டு, நால்ரோடு வழியாக சென்று, கழுகரை புதிய நான்கு வழிச்சாலைக்கு சென்றனர்.
போலீசாரும், பொதுமக்களும் பின்னால் துரத்திச்சென்ற நிலையில், திடீரென வாகனங்களை விட்டு, விட்டு, ஐந்து பேர் திசைக்கு ஒருவராக, தப்பி ஓடினர். புதர் மறைவில் இருட்டில் மறைந்து, தப்பினர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
போலீசார் கூறுகையில், 'இரவு நேரம் என்பதால், இரண்டு கி.மீ., துாரம் துரத்தியும், புதர்களுக்குள் புகுந்து தப்பினர். அருகிலேயே அமராவதி ஆறும் உள்ளதால், தப்பி விட்டனர். தொடர்ந்து தேடுதல் பணி நடக்கிறது. 'சிசிடிவி' கேமரா ஆய்வு செய்ததில், குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. விரைவில் பிடிக்கப்படுவர்,' என்றனர்.