/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரைகுறை 'பேட்ச் ஒர்க்' தாறுமாறானது தார் ரோடு அரைகுறை 'பேட்ச் ஒர்க்' தாறுமாறானது தார் ரோடு
அரைகுறை 'பேட்ச் ஒர்க்' தாறுமாறானது தார் ரோடு
அரைகுறை 'பேட்ச் ஒர்க்' தாறுமாறானது தார் ரோடு
அரைகுறை 'பேட்ச் ஒர்க்' தாறுமாறானது தார் ரோடு
ADDED : ஜூன் 17, 2024 12:54 AM

கோவை;கோவை மருதமலை சாலையில் அவசர அவசரமாக பேட்ச் ஒர்க் பணிகள் அரைகுறையாக மேற்கொள்ளப்பட்டது.
கோவை மருதமலை சாலையில் மேடு பள்ளங்கள் நிறைந்திருப்பதாகவும் அவற்றை செப்பனிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தொடர் புகார்கள் சென்றது. இதையடுத்து மருதமலை சாலையிலுள்ள குழிகளை சரிசெய்ய வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சந்திரசேகரன் உத்தரவிட்டார்.
இதையடுத்து, வடகோவையிலிருந்து கவுலிபிரவுன் சாலை, லாலிசாலை, வேளாண்பல்கலை, பி.என்.புதுார், வடவள்ளி, கல்வீரம்பாளையம், மருதமலை வரை அமைந்துள்ள சாலையை செப்பனிட்டு அதிலுள்ள குழிகள் சரிசெய்யப்பட்டு தார் கலந்த ஜல்லிகற்களை கொண்டு நிரப்ப அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட தார் ஜல்லி கற்களை தார் சாலையிலுள்ள குழிகளில் நிரப்பி அதன் மேல் வேப்ப மரக்குச்சிகளில் தாரை தோய்த்து நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் எடுத்து ஊற்றினர்
சரிசெய்த அரை மணி நேரத்திலேயே மீண்டும் அங்கு குழி ஏற்பட்டது.பேட்ச்ஒர்க் சில மணி நேரங்களிலேயே காணாமல் போனது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பாரதி கூறுகையில்,'' சரியான அளவீடுகளில் தார் மற்றும் ஜல்லி கற்களை கலந்து பேட்ச் வேலை செய்ய அறிவுறுத்தியிருக்கிறோம். இது குறித்து விசாரிக்கப்படும்,''என்றார்.