/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'ஒரு பயிரின் வளர்ச்சிக்கு 17 வகை சத்துக்கள் தேவை' 'ஒரு பயிரின் வளர்ச்சிக்கு 17 வகை சத்துக்கள் தேவை'
'ஒரு பயிரின் வளர்ச்சிக்கு 17 வகை சத்துக்கள் தேவை'
'ஒரு பயிரின் வளர்ச்சிக்கு 17 வகை சத்துக்கள் தேவை'
'ஒரு பயிரின் வளர்ச்சிக்கு 17 வகை சத்துக்கள் தேவை'
ADDED : ஜூலை 11, 2024 06:21 AM
போத்தனூர் : மதுக்கரை வட்டார வேளாண் துறை சார்பில், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பண்ணை பள்ளி நடந்தது,
மாவுத்தம்பதியில் நடந்த இப்பள்ளியில், வட்டார தொழில்நுட்ப மேலாளர் தனபிரியா அட்மா திட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கினார். வேளாண் உதவி இயக்குனர் சுதா பேசுகையில், பண்ணை பள்ளி என்பது, விதைப்பு முதல் அறுவடை வரை தேவைப்படும் தொழில்நுட்பங்களை விளக்குவதாகும். மாவுத்தம்பதி கிராமம், அனைத்து ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, என கூறினார்.
காரமடை வேளாண் அறிவியல் நிலைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுனர் சகாதேவன் பேசுகையில், ஒரு பயிரின் வளர்ச்சிக்கு, 17 வகை சத்துக்கள் தேவை. இதில், கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகியவை இயற்கையாகவே கிடைக்கின்றன. பேரூட்ட சத்துக்களான தழை, மணி, சாம்பல் சத்துக்கள், இரண்டாம் நிலை ஊட்டச்சத்துக்களான மாங்கனீஸ் போன்றவை மகசூலுக்கு காரணமாகின்றன, என்றார்.
மேலும் குழித்தட்டு நாற்றங்கால் முறையில், காய்கறி நாற்றுகள் வளர்ப்பு குறித்து செயல்விளக்கம் அளித்தார். தோட்டக்கலை உதவி அலுவலர் கார்த்திக், மானிய திட்டங்கள் குறித்து கூறினார். வேளாண் உதவி அலுவலர் ஜெயபாரதி, தொழில்நுட்ப மேலாளர் நாகராஜ் ஏற்பாடுகளை செய்திருந்தனர். காய்கறி விவசாயிகள் பங்கேற்றனர்.