/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 72 வி.ஏ.ஓ.,க்கள் கூண்டோடு மாற்றம் 72 வி.ஏ.ஓ.,க்கள் கூண்டோடு மாற்றம்
72 வி.ஏ.ஓ.,க்கள் கூண்டோடு மாற்றம்
72 வி.ஏ.ஓ.,க்கள் கூண்டோடு மாற்றம்
72 வி.ஏ.ஓ.,க்கள் கூண்டோடு மாற்றம்
ADDED : ஜூலை 11, 2024 11:24 PM
அன்னுார் : கோவை வடக்கு வருவாய் கோட்டத்தில், 72 வி.ஏ.ஓ.,க்கள் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.
கோவை வடக்கு வருவாய் கோட்டத்தில், அன்னுார், மேட்டுப்பாளையம், கோவை வடக்கு ஆகிய மூன்று தாலுகாக்கள் உள்ளன. இதில் 78 கிராம நிர்வாக அலுவலகங்கள் உள்ளன. நான்கு வி.ஏ.ஓ.,க்கள் பணியிடம் காலியாக உள்ளது. மீதமுள்ள 74 பேரில், 72 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் பிறப்பித்துள்ளார். அன்னுார் உள்வட்டத்தில் மசக்கவுண்டன் செட்டிபாளையத்திற்கு ஆனந்தகுமார், காரே கவுண்டம்பாளையத்திற்கு அமீர் ஹாசன், காட்டம்பட்டிக்கு செந்தில்குமார், பச்சாபாளையத்துக்கு பழனிச்சாமி, குன்னத்தூருக்கு பாண்டி, குப்பேபாளையத்திற்கு லட்சுமி, கஞ்சப்பள்ளிக்கு ஜெயபாரதி, வடக்கலூருக்கு ராஜேஸ்வரி, பொகலூருக்கு சுமதி, அன்னுாருக்கு பிரபு, கரியாம்பாளையத்திற்கு துளசிலட்சுமி, பிள்ளையப்பம்பாளையத்திற்கு முத்து, ஆம்போதிக்கு தமிழரசி, கனுவக்கரைக்கு நாகராஜ், அல்லப் பாளையத்திற்கு ராணி, அக்கரை செங்கப்பள்ளிக்கு வேணுகோபால், குப்பனுாருக்கு பிரபு, அ. மேட்டுப்பாளையத்திற்கு ராஜசேகரன், பசூருக்கு அரவிந்த் பிரசாத், நாரணாபுரத்திற்கு தமிழ்ச்செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்
சர்க்கார் சாமகுளம் உள்வட்டத்தில், கோவில்பாளையத்திற்கு அறிவுடை நம்பி, வெள்ளானைப்பட்டிக்கு செல்வன், கள்ளிப்பாளையத்திற்கு பிரேமா, வெள்ளமடைக்கு குமரன், இடிகரைக்கு வேணுகோபால், கொண்டையம் பாளையத்திற்கு பாலச்சந்திரன், கீரணத்தத்திற்கு குமாரசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.